தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதன்படி www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தியது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து 22,000க்கும் மேற்பட்டோர் டிசிசி (driver cum conductor) பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அந்த அறிவிப்பின்படி, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 364, விரைவு போக்குவரத்து கழகத்தில் 31,8 விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, திருநெல்வேலி கோட்டத்தில் 362, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322 என மொத்தம் 3674 பணியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டு வரும் ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான மையங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது.
