பொதுவாகக் குரங்குகள் என்றால்ச் சேட்டைக்கார விலங்குகள் என்ற எண்ணம் இருந்தாலும், சில சமயம் அவை காட்டும் மனிதநேயம் நம் மனதைத் தொட்டுவிடும்.
அப்படிப்பட்ட ஒரு வீடியோவில், ஒரு குரங்கு கையில் முள்ளுக் குத்திய ஒரு நபருக்கு உதவி செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி, மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
That look of that monkey; “aren’t you able to do anything yourself?” pic.twitter.com/bj2bytFO5q
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 4, 2025
வீடியோவில், கையில் முள்ளுடன் அவதிப்பட்ட ஒரு நபர், ஒரு குரங்கின் அருகில் செல்கிறார். எதிர்பார்ப்பின்றிச் சென்ற நபருக்கு உதவிக் கரம் நீட்டிய அந்தக் குரங்கு, அவரதுக் கையில் குத்தியிருந்த ஒவ்வொரு முள்ளையும் மிகவும் கவனமாக எடுத்து விடுகிறது.
பிறகு, கையில் இன்னும் ஏதேனும் இருக்கிறதா என்றுப் பார்த்துக் கையைத் திறக்கச் சொல்கிறது. இந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், “அன்பும் சிகிச்சையும் மனிதர்களுக்கு மட்டும் அல்ல, இயற்கையும் சில சமயம் ஆச்சரியங்களை நிகழ்த்துகிறது” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தக் குரங்கின் மனிதநேயச் செயல்பாடு, பலருடைய மனதைத் தொட்டுள்ளது.
