பிரபலமான எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் தைவானில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 4 வருட சம்பளத்தை போனஸ் ஆக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‌

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டை விட 2022-ம் ஆண்டில் எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வருவாய் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால்தான் தன்னுடைய ஊழியர்களுக்கு 4 வருட சம்பளத்தை (50 மாதங்கள்) போனஸ் ஆக வழங்குவதற்கு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.