கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தின் ஆதர்ஷ் காலனியில் ஆகஸ்ட் 27ஆம் தேதி நடந்த ஒரு கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில், 6 வயது ஷனவியை முன் கட்டிடம் மாடியில் விளையாடும் போது தவறி விழுந்ததாக தந்தை போலீசில் புகாரளித்திருந்தார். ஆனால், அருகிலுள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகள் அந்தச் சம்பவம் விபத்தல்ல, திட்டமிட்டு செய்த கொலை என உறுதி செய்துள்ளன.
View this post on Instagram
வீடியோவில், சுமார் 6 வயதான ஷனவி, அவரது வளர்ப்புத் தாய் ராதா என்பவரால் முன் கட்டிடத்தின் மேலிருந்து கீழே தள்ளிவிட்டது தெளிவாக பதிவாகியுள்ளது. ராதா, சிறுமியை மேல் மாடிக்கு அழைத்துச் சென்று, நாற்காலியில் ஏற சொல்லி, பின் பின்னால் தள்ளி கொன்றதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர நிகழ்வு, அங்கிருந்த சிசிடிவி மூலம் பதிவு செய்யப்பட்டு, அதை அண்டை வீட்டுக்காரர் நேரடியாக போலீசாரிடம் ஒப்படைத்ததில் தான் உண்மை வெளிவந்தது.
முதற்கட்ட விசாரணையில், இந்த கொலை, சொத்து தொடர்பான தகராறில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராதா மீது வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதேபோன்ற சம்பவம், கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குர்லா பகுதியில் நடந்ததாகவும், கோபத்தில் தந்தை தன் குழந்தையை தரையில் வீசி கொன்றதையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
