அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த visual effects பிரிவில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹம், எரின் சேன்டன், டேனியல் பேரட் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மேலும் உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார். இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 160 மொழிகளில் வெளியான நிலையில் ரூ. 18,534 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இதனால் உலக அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.