இந்தியா நடத்திய மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரிச்சா கோஷ் (Richa Ghosh), தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, அவரதுப் போராட்டமான ஆட்டத்தைப் பாராட்டும் வகையில், காவல்துறைப் பணி ஒன்று வழங்கப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னதாக அறிவித்திருந்தார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி அளித்த வாக்குறுதியின்படி, ரிச்சா கோஷ் இன்று (டிசம்பர் 5) காவல் துணை ஆணையராக (Deputy Commissioner of Police) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இளம் வயதிலேயே உலகக் கோப்பை போன்றப் பெரியத் தொடரில் விளையாடியதோடு, தற்போது காவல்துறையில் டி.எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றுள்ள ரிச்சா கோஷ்ஷுக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
