ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறும் கிரிக்கெட் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக பி.சி.சி.ஏ பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.

மற்ற அனைத்து அணிகளுடன் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோதும். இதனையடுத்து லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4  இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பின்னர் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் மோதும். இந்த மாதம் 29-ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டங்கள் தொடங்க உள்ளன. பயிற்சி ஆட்டங்களில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 30-ஆம் தேதியும், இந்தியா, நெதர்லாந்து அணிகள் அக்டோபர். 3-ஆம் தேதியும் விளையாடுகிறது

உலகக் கோப்பைக்கான வீரர்கள் இம்மாத தொடக்கத்தில் பிசிசிஐ அறிவித்த நிலையில், பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளது. காயத்தில் இருந்து முழுமையாக மீளாத ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளித்தது ஏன்? சூர்யகுமார் ஒருநாள் போட்டிகளில் திணறும் வேளையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? சஞ்சு சாம்சன், சஹால், அஸ்வின் ஆகியோருக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை என கேள்வி எழுப்புகின்றனர். மற்றொரு கேள்வி ஏன் பும்ரா – ஷமி – சிராஜ் என மூன்று பிரீமியம் வேகப்பந்துவீச்சாளர்களை ஒன்றாக பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை என்பது தான்.

இந்த பிரச்சனை குறித்து மூத்த இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, தனது youtube தளத்தில் பேசியுள்ளார். அதில் முகமது ஷமி தார்ரோடு போன்ற தட்டையான ஆடுகளத்தில் நிறைய விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் ஆட்டம் இழந்த பந்து ஆட்டத்தின் சிறப்பு பந்தாகும். எட்டாவது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேனிடம் இருந்து ரன்களா அல்லது ஷமியின் விக்கெட்டுகளா என்பதுதான் இந்தியாவிற்கு தேவை. இது தெரிந்து விட்டாலே விவாதம் முடியும்.

ஆனால் இந்திய அணி ஷமி ,முகமது சிராஜ், மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை ஒன்றாக பிளேயிங் லெவனில் வைக்காது என நினைக்கிறேன். அவர்கள் எட்டாவது ஆட்டத்தில் நல்ல ரன்கள் வேண்டும் என்பதை விடப்படியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் இந்த மூன்று பந்து பேச்சாளர்களுடன் செல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன். மூன்றாவது பந்து வீச்சாளராக ஷர்துல் இருப்பார். மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக அக்ஷர் அல்லது அஸ்வின் இருக்கலாம். ஆனால் ஷமி சிறந்த திறன் உடையவர் என்பதில் ஐயமில்லை என பேசி உள்ளார்.