ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறும் கிரிக்கெட் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக பி.சி.சி.ஐ பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. மற்ற அனைத்து அணிகளுடன் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோதும்.

முதல் போட்டியில் அக்டோபர் 8- ஆம் தேதி இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லியில் வைத்து இந்தியாவும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகிறது. உலகமே எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15-ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்க உள்ளது.

இதனை தொடர்ந்து அக்டோபர் 19-ஆம் தேதி இந்தியா வங்காளதேசம் அணிகள் பூனேவிலும், அக்டோபர் 22-ஆம் தேதி இந்தியா நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவிலும் மோதுகிறது. பின்னர் ஒரு வாரம் இந்திய அணிக்கு போட்டிகள் இல்லை. இதனை தொடர்ந்து அக்டோபர் 29-ஆம் தேதி லக்னோவில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நவம்பர் மாதம் 2- ஆம் தேதி இந்திய அணி தகுதி சுற்றுக்கு வெல்லும் அணியுடன் மும்பையில் போட்டியிடும்.

நவம்பர் 5-ஆம் தேதி கொல்கத்தாவில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளும், நவம்பர் 11-ஆம் தேதி இந்திய அணி தகுதி சுற்றில் இருந்து வரும் 2-வது அணியுடனும் பெங்களூரில் மோதுகிறது. புள்ளி பட்டியலில் நான்கு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இந்திய அணி ஐந்து அல்லது ஆறு அணிகள் யாவது தோற்கடித்து வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.