உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ஆம் தேதியை உலக முடக்குவாதத்தனமாக அனுசரித்து வருகிறது. வயது முதிர்வு என்றாலே மூட்டு வலி பிரச்சனை தான் முக்கியமான நோயாக கருதப்படுகிறது. இது ஆர்த்ரைட்டிஸ் என அழைக்கப்படுகிறது. கடந்த 1996-ஆம் ஆண்டிலிருந்து ஆர்த்ரைட்டிஸ் மற்றும் ரூமட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.

இந்த நாளில் ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் முடக்கு வாத நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாத நோய்களில் நாள்பட்ட மூட்டு வலி என்பது மிகவும் கடுமையாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் கூட மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படுவதற்கு காரணம் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பது. முடக்கு வாதம் என்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் உடலின் உறுப்புகளை பாதிக்கும் நோய் முக்கியமாக மூட்டு திசைகள் பாதிப்படைந்து எலும்புகளின் வடிவமைப்பையே மாற்றிவிடும்.

ஆர்த்ரைட்டிஸ் உடலில் இருக்கும் 170-க்கும் அதிகமான எலும்பு இணைப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை குறிக்கும். இதனால் வலி ஏற்பட்டு மூட்டுகளின் வலியும், தன்மை இழந்து விரைப்பான நிலை ஏற்படும். உடலின் அசைவுகளை முடக்கி விடுவதால் இதனை முடக்குவாதம் என கூறுகின்றனர். இன்றைய நாளில் ஆர்த்ரைட்டிஸ் வருவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கலாம்.