தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள்  யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, நம்முடைய இணையமைச்சர் முருகன் ஐயா அவர்கள் நம்முடன் முழுமையாக இருந்து,  அவசரமான அலுவலக வேலையாக வீடியோ கான்பரென்ஸ்காக கிளம்பிட்டாங்க. அவருடைய வருத்தத்தை உங்களிடம் தெரிவிக்க சொன்னாங்க.  உங்களுக்காக டெல்லியில் இருந்து வந்து பேச வேண்டும் என்பதற்காக வந்து, அவர் அவசர வேலைக்காக போய்ட்டார். அதுனால நம்முடைய மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும், வணக்கங்களை தெரிவித்துகே கொள்கின்றேன்.

என் மண்,  என் மக்கள் யாத்திரை மிக அற்புதமான யாத்திரையாக இருப்பதற்கு காரணம் ஒரு சட்டமன்ற வேட்பாளர் இங்கு  செய்யக்கூடிய வேலை. ஒரு பானை சோறுக்கு,  ஒரு சோறு பதம் என்பது  போல,  கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் அக்கா வேலை என்பது கோயம்புத்தூர் முழுவதுமே….  கொங்கு மண்டலம் முழுவதுமே படர்ந்து இருக்கிறது. எப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் அகில இந்திய பொறுபை வச்சிகிட்டு,  அக்கா இரண்டு நாட்களுக்கு முன்பு  நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வானதி அக்கா பாரத பிரதமருக்கு ஒரு பாராட்டு விழா வைத்திருந்தார்கள்.

டெல்லியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி ஐயா அவர்கள் வரும்பொழுது காலிலே விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாங்க…  நான் வரும்பொழுது அக்கா கிட்ட கேட்டேன். அக்கா என்கிட்ட சொன்னாங்க…  தம்பி நானெல்லாம்  அரசியலுக்கு வந்து முப்பது வருஷமா வருஷம் ஆகுது. எத்தனை இடர்பாடுகளை ஒரு பெண்  பார்த்திருப்போம். கைக்குழந்தையோடு போயி அரசியல் மீட்டிங்கில் உட்கார்ந்து இருப்போம். ஒரு மாசம் பையனைக் கொண்டு போய் மீட்டிங் நடக்கும் பக்கத்துல உட்கார்ந்திருப்பேன்.

பாரதிய ஜனதா கட்சியில வேறவேற பொறுப்பில் இருக்கும் பொழுது….  இன்னைக்கு அவ்வளவு பெண்கள் கஷ்டப்படுறாங்களே….  பெண்கள் வந்தால்தானே அரசியல் சுத்தம் ஆகும் என்று….  33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டப்பேரவையில்….. பாராளுமன்றத்தில்….  பிரதமர் தெரிவிக்கும் போது அவரை கடவுளாக பார்க்கிறோம். எத்தனை பெண்களுக்கு அரசியல் எழுச்சி வேண்டும் என்பதற்காக  போட்டு இருக்க கூடிய விதை,  நேரா சொல்லிட்டாரு….. எப்போ வரப்போகுது என சொல்லிட்டாரு ? எப்படி வரப்போகுது சொல்லிட்டாரு ?

அப்படிப்பட்ட ஒரு பாராட்டு விழா,  பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமை அலுவலகத்தில பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவர்களுக்கு…  அகில இந்திய மகளிர் அணி கொடுத்தாங்க. ஆனால் அக்கா அவர்களை  இந்த நேரத்துல உண்மையாலும் சிறப்பாக பாராட்டியாக வேண்டும். கோயம்புத்தூர் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய கோட்டையாக இருப்பதற்கு நம்முடைய சட்ட மன்ற உறுப்பினர் உடைய வேலை அப்படி என தெரிவித்தார்.