ஆந்திரா மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலைவாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அதிலும் குறிப்பாக சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளை அளித்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆந்திரா மாநில முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அவர் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அக்கட்சி அளித்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

அதன்படி வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியம், வருடத்திற்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் போன்ற சில வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார்.