திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமீரா பானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதில் இப்ராஹிம் வட மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமீரா பானு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சமீரா பானு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.