இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து மிகத்தீவர புயலாக மாறி,  எமனுக்கு அருகே கரையை கடக்கும். கரையை கடக்கும் 150 கிலோமீட்டர் வேகத்துல காற்று வீச வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

வங்க கடலில் பார்த்தோம் என்றால் ? அங்கேயும் ஒரு காற்றழுத்த  தாழ் பகுதி உருவாகி,  காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது புயலாக  மாறினாலும் நம்மை நோக்கி வராது.

வங்கக்கடலில் இருக்கும் சலனம் தமிழகத்தை நோக்கியோ,  ஆந்திர பகுதிகளை நோக்கி வராமல் வடக்கு வடகிழக்கு திசையில் திரும்பி,  வங்கதேசம் அதனை ஒட்டி இருக்கும் மேற்கு வங்க கடலோரம் பகுதியை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்கு நகரம் என சொல்லி உள்ளார்கள்.

ஒருவேளை இந்த சலனம் தமிழகத்தை நோக்கி வரும் பட்சத்தில் கனமழை இன்னும் அதிகமாக இருக்கும். மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும்.  தமிழகத்துடைய பல பகுதிகளிலும் கன மழை பெய்ததற்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இது நம்மை நோக்கி வராமல் வங்கதேசத்தை நோக்கி செல்வதன் காரணமாக ? தமிழகத்தில் ஒரு சில இடங்களில்…

குறிப்பாக ஏழு மாவட்டங்களில் மட்டும் கன மழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களின்  மற்ற இடங்களில்..  தென்தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும்,  வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை இரண்டு கடலிலுமே சலனங்கள் இருப்பதால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள். மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்ற  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 65 கிலோமீட்டர் வேகம் வரை காற்று   அதிகப்படியாக வீசுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.  வடக்கு கிழக்கு வங்க கடல் பகுதி,  ஒடிசா, மேற்குவங்கம், வங்கதேச கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது.

தென்மேற்கு அரபிக் கடல் பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்  கடல் பகுதிகளில் அதிகப்படியான காற்று வீசும்.  குறிப்பாக தேஜ் புயல்.  அதனால் நமக்கு எந்த பலனும் கிடையாது. நேரடியாகவும் கிடையாது,  மறைமுகமாகவும் கிடையாது. தேஜ் புயல் ஏமனில் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 135 – 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று  வீச வாய்ப்பு இருக்கிறது. அது அரபிக் கடலில் இருக்கும் போது அதிகபட்சம் 180 வேகமாக காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மத்திய அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளார்.