நாடு முழுவதும் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது ஒரு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது, நாடு முழுவதும் மின்சார வாகனங்களை இயக்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை அதிக அளவில் இருக்கிறது. இனி இந்தியாவில் வரவிருக்கிற காலம் மின்சார வாகனங்களின் காலம் என்று கூறினார். மேலும் தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 800 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 17 லட்சம் மின்னணு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதோடு ஹைட்ரஜன் கார்கள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும், இது எதிர்காலத்தில் சாலைகளில் இயங்கும் எனவும் கூறினார்.