வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களும் இப்போது தங்களின் குடும்ப உறுப்பினர், நண்பர்கள் உள்ளிட்ட பலருடன் Group video மற்றும் Voice calls செய்வதற்கான அம்சங்களை மெட்டா நிறுவனமானது அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு மற்றொரு அம்சத்தையும் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி Windows டெஸ்க்டாப் பயனர்களுக்கு புது செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் Windows டெஸ்க்டாப் பயனர்கள் இப்போது ஒரே சமயத்தில் 4 சாதனங்களுடன் தங்களின் வாட்ஸ் அப் கணக்கை இணைக்கலாம் என்ற புதுமையான அம்சத்தை அறிமுகம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது வாட்ஸ்அப் கணக்கை 4 சாதனங்களுடன் இணைப்பதற்குரிய வழிமுறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். தற்போது வாட்ஸ்அப் பதிவுசெய்யப்பட்டுள்ள மொபைலில் Settings என்பதற்குள் சென்று “Linked Devices” என்பதை கிளிக் செய்யவும். அதன்பின் Link a New Device என்பதை கிளிக் செய்யவும். தற்போது நீங்கள் இணைக்க உள்ள Windows Desktopல் web.whatsapp.com என்ற WhatsApp Web-க்கான இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் தோன்றக்கூடிய QR code-ஐ Scan செய்தால் போதும் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு இணைக்கப்பட்டுவிடும்.

இதேபோல் மற்ற 3 சாதனங்களில் இணைக்க மேற்கண்ட 3 படிநிலைகளை திரும்ப செய்ய வேண்டும். இவ்வாறு 4 சாதனங்களுடன் இணைக்கப்பட்ட பின் உங்களின் மொபைல் ஆன்லைனில் இருக்கவேண்டிய அவசியமில்லை. நீங்கள் Offline சென்றாலும் இந்த இணைக்கப்பட்ட சாதனங்களில் உங்களால் பயன்படுத்த இயலும். இதன் காரணமாக மொபைல் போனிற்கு சார்ஜ் செய்யவேண்டிய தேவை ஏற்படாது. அதோடு நீங்கள் 14 தினங்களுக்கு மேல் மொபைலில் WhatsApp-ஐ பயன்படுத்தாமல் இருப்பின், WhatsApp கணக்கு இணைக்கப்பட்ட சாதனங்களில் WhatsApp Logout செய்யப்பட்டு விடும். இது பயனர்களுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்குகிறது.