கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியில் அனில்குமார் (48), தன்னியா (40) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். அனில்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். தன்னியா அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அனில் குமார், தனது மனைவியின் கடைக்கு சென்று உள்ளார்.

அப்போது பத்துகாணி நிஜாபவன் என்ற பகுதியில் வசிக்கும் பாஜக பிரமுகர் மது குமார்(52) என்பவர் தன்னியாவின் கடைக்கு சென்றுள்ளார். அங்கு தன்னியாவிற்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அணில்குமார் மனைவியை கண்டித்ததோடு, பாஜக பிரமுகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுகுமார், அணில் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  மதுகுமாரை தேடி வருகின்றனர்.