செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக சந்தித்து இருக்கிறார்கள் ? சொல்லுங்கள்..  கோரிக்கை வைக்க. கோரிக்கை மனுவை சும்மா வீட்ல கொண்டுவந்தால் ? யார் நிறைவேற்றி தருவது…  நல்லா புரிஞ்சுக்கோங்க.

இப்ப இங்க இருந்து பல திமுக அமைச்சர்கள் டெல்லியில் போய் மத்திய அமைச்சரை சந்திச்சாங்க. திமுகவோடு கூட்டணி சேர்த்துஇருக்கின்றார்களா ? பல மத்திய அமைச்சர்கள் நம்முடைய தமிழ்நாட்டுக்கு வரும்போது அந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பங்கு பெறுகிறார்கள்.  அந்த மாதிரி தான், கோவை ADMK  சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னை விவசாயிகளுடைய நலன் கருதி மத்திய அமைச்சரை சந்தித்தார்கள் என தெரிவித்தார்.