ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத் எம்பி ஓவைசி, பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் வரை இந்தியாவிற்கு நிரந்தர அமைதி கிடைக்காது. தற்போது சண்டை நிறுத்தம் இருந்தாலும், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் விடக்கூடாது. இந்தியா கடந்த 1972 ல் பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து வேறு தரப்பினர் நம் பிரச்சனையில் தலையிடுவதை நாம் விரும்பியது இல்லை. இப்போது மட்டும் ஏன் மூன்றாம் தரப்பினர் தலையிடுகிறார்கள்?பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்காது என்று அமெரிக்கா உத்தரவாதம் கொடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.