தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கூறியதாவது, மத்திய அரசாங்கத்திடம் வருவாய்த்துறை மற்றும் வருமானவரித்துறை இருப்பதால் அவர்களே சொத்துக்கள் எப்படி வந்தது, வாட்ச் எப்படி வந்தது என்பது குறித்து கணக்கு பார்த்துக் கொள்ளலாமே என்று கூறினார்.

அதன் பிறகு அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தாக்கல் அறிக்கை அளிக்க வேண்டும். அறிக்கை அளிக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு நம்பகத்தன்மை இல்லாததாக என்றும் கூறினார்.