நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் பலா மரங்கள் ஏராளமாக இருக்கிறது. தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானைகள் பர்லியார் பகுதிக்கு வந்து கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலை ரயில் பாதையில் முகாமிட்ட காட்டு யானையை வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு விரட்டி அடித்தனர். தற்போது மீண்டும் ஒற்றை காட்டு யானை மலை ரயில் பாதையில் உலா வருகிறது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் திடீரென காட்டு யானை இரண்டு வனத்துறை ஊழியர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி காட்டு யானை செல்வதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அந்த யானையும் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.