கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் குரங்கு நீர்வீழ்ச்சி, ஆழியாறு அணை, லாப்சிலிப் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குரங்கு நீர்வீழ்ச்சி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை ஆழியாறு அணைக்கு வந்து தாகத்தை தணித்து சென்றது.

அப்போது ஆபத்தை உணராமல் சில சுற்றுலா பயணிகள் அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் நவமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்டி அடித்தனர். கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் அதிகமாக உலா வருவதால் வாகன ஓட்டுகளும், சுற்றுலா பயணிகளும் கவனமாக  இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.