அமெரிக்கா பென்சில்வேனியா மாகாணத்தில் பெஞ்சமின் குவால்(49), கார்மென் மார்டினெஸ் சில்வா (50) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் கார்மென் தனது தலைமுடியை வெட்டி அலங்கரித்து இருக்கிறார். இந்த புதிய ஹேர் ஸ்டைல் பெஞ்சமினுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதோடு கார்மெனை கத்தியால் குத்த போகிறேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அவர், இரவில் மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அடுத்த நாள் தனது சகோதரனின் வீட்டிற்கு சென்று தோழி ஒருவரை தொடர்பு கொண்டு பெஞ்சமின் உடனான உறவை முடித்துக் கொள்ள போகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் கார்மெனை தேடி அலைந்த பெஞ்சமின் அவர் சகோதரர் வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது.
இதனால் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கார்மென் அங்கு இல்லை. இதையடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த கார்மெனின் சகோதரரை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த கார்மெனையும் தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பார்த்தபோது கார்மெனின் சடலமும், அவருடைய சகோதரர் காயங்களுடன் கிடந்துள்ளனர். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பெஞ்சமினை கைது செய்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.