உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க தேர்தலில் 295 எலக்ட்ரோல் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்க அதிபர் ஆனார் டொனால்ட் ட்ரம்ப். 47 ஆவது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ட்ரம்புக்கு பல நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பேசிய பல திரைப்பட பிரபலங்கள் தங்களது சோகத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்க பாடகி பில்லி ஐலிஸ் தனது இணையதள பக்கத்தில் “இது பெண்கள் மீதான போர்” என தனது சோகத்தை வெளிப்படுத்தினார்.
மற்றொரு மூத்த ஹாலிவுட் பிரபலமான ஜேம் லீ கர்டிஸ் தனது இணைய பக்கத்தில் “மீண்டும் கொடூரமான கட்டுப்பாடு மிக்க ஆட்சி வருகிறது. தொடர்ந்து போராடுவோம் பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர், சிறுபான்மையினர் அஞ்சுகின்றனர்” என நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க ராப் பாடகி கார்டி பி தீவிர கமலா ஹாரிஸ் ஆதரவாளராக இருந்தார். இவர் தனது இணைய பக்கத்தில் “நான் உங்கள் அனைவரையும் வெறுக்கிறேன்” என பதிவிட்டு இருந்தார். ஹாலிவுட் பிரபலமான கிறிஸ்டினா ஆப்பிள் கேட் தனது இணைய பக்கத்தில் “பெண்களுக்கு எதிரான ஆட்சிக்கு வாக்களித்து இருந்தால் என்னை பின்தொடர வேண்டாம் உண்மைக்கு எதிரான ரசிகர்கள் எனக்கு தேவையில்லை” என கோபமாக தெரிவித்துள்ளார்.