ஐந்து மாநில தேர்தலில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்று  உளுத்துற அமைச்சர் அமித் ஷா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, ஆமாம்..!  பின்ன அவர் ஆட்சி அமைக்க மாட்டேன் என்றா சொல்ல முடியும். அவர் போய் ஆட்சி அமைப்போம் என்று தான் சொல்லுவாரு.  எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய இந்திய ஒற்றுமை பயணத்தின் உடைய விளைவு பொது மக்களையும் கவர்ந்திருக்கிறது.

இதுவரை என்ன நிகழ்ந்திருக்கிறது என்றால் ? எங்களுடைய கட்சிகாரர்கள்…. எங்களுடைய கூட்டணி கட்சிகாரர்கள் வாக்களித்தார்கள். ஆனால் ராகுல் காந்தியின் உடைய இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பிறகு,  பொதுமக்களும் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். அதனாலதான் கர்நாடகத்தில் ஜெயிச்சோம். லடாக்கில் ஜெயிச்சோம். எங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. எனவே இந்த ஐந்து மாநில தேர்தல்களில் அந்த வெற்றியை எட்டுவோம்.

அமலாக்கதுறை சோதனை,  வருமானவரி சோதனை அதிகரித்து வருவதை நீங்க எல்லாம் எதிர்த்து எழுதாதது ஏன் ?  நீங்க யாராவது வாய திறக்கறீங்களா ? ஊடகங்கள் அதை எதிர்க்க வேண்டாமா ? வருமான வரித்துறை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். இது தவிர அவங்களுக்கு என்ன நோக்கம் இருக்கு? எதற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  துன்புறுத்துகிறார்கள் ? என்ன கைப்பற்றினாங்க அவர்கிட்ட ?  சட்டத்துக்கு புறம்பாக அவர்கிட்ட  என்ன இருந்தது ? 

எவ்வளவு தங்கம் இருந்தது ? எவ்வளவு ரொக்கம் இருந்தது ? என்ன செஞ்சார் அவர் ? இன்னைக்கு வரைக்கும் அமலாக்கத்துறை அதை வெளியிட்டதா? வெளியிடல… ஏன் செந்தில் பாலாஜி மேல ஏன்  கோவம்ன்னா… கொங்கு மண்டலத்தில அதிமுகவும்,  பாரதிய ஜனதாவும் தான் பலம் என்கின்ற மாயயை உடைத்தெறிந்தார். கொங்கு மண்டலத்துல….

சேலத்துல இருந்து கோயம்புத்தூர் வரை உள்ளாட்சித் தேர்தல் எல்லா தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தார். எனவே அவரை குறி வைக்கிறாங்க. குறி வச்சு தான் அவரை கைது செய்தார்கள். என்ன அவர் கிட்ட இருந்து கைப்பற்றுனீங்க ?  சொல்லனும் இல்ல. சட்டத்திற்கு புறம்பாக… வருமானத்திற்கு அதிகமாக… என்ன சொத்து வைத்திருந்தார்? என தெரிவித்தார்.