செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பேசுறாரு  மைக் ஆப் பண்ணுறாங்க. எந்த அளவுக்கு வந்து பாத்தீங்கன்னா….  ஒரு பயம்  ஸ்டாலினுக்கு இருக்கு. திமுக பண்ணுன காவேரி துரோகம் எல்லாம் மக்களுக்கு போயிடக் கூடாதாம். மைக் ஆப் பண்ணிட்டா… சீப்பை ஒளிச்சி வச்சிட்டா,  கல்யாணம் நின்னுருமா? தமிழ்நாட்டுக்கே தெரியும்…

ஒப்பந்தம் புதுப்பிக்காதது… காவேரி நடுவர் மன்றம் வாங்காதது…. எங்க தலைவர் தான வாங்கி கொடுத்தாரு.  காவேரி நடுவர் மன்றம்,  205 டி.எம்.சி தண்ணீரு கேசட்டுல வெளியிட்டது அம்மா. அப்பறம் காவேரி ஒழுங்காற்று குழு, காவேரி மேலாண்மை ஆணையம். இது எல்லாம் போட்டது எடப்பாடி அண்ணன் ஆட்சி காலத்துல… அவ்ளோ பெரிய முயற்சி எடுத்தது அம்மாவுடைய அரசு.

காவிரி நீண்ட நெடிய வரலாறு பாத்தா  அந்த உரிமையை  நிலைநாட்டக்கூடிய அளவுக்கு எல்லா விதமான  நடவடிக்கை எடுத்து, அதை சொந்தம் கொண்டாடிய கட்சின்னா  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்…  அம்மாவுடைய அரசு தான். திமுக கிஞ்சித்தும் கிடையாது. 1972இல் கர்நாடக அரசை எதிர்த்து அன்னைக்கு விவசாயிகள் உச்சநீதிமன்றத்துக்கு போறதுக்கு முயற்சி பண்ணாங்க. அப்படி எதிர்த்து போகும் போது,  அப்படி போக கூடாது. 

வழக்கை வாபஸ் வாங்கணும் அப்படினு சொல்லி விவசாயிகளை மிரட்டுனது யாரு ? இதே திரு.  கருணாநிதி தான அன்னைக்கு முதலமைச்சரா இருக்கும் போது மிரட்டுனாரு. அதுஎல்லாம் தெரியும். அந்த தீர்மானத்துல காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசுக்கு போடுறதுக்கு வக்கு இல்ல,  துப்பு இல்ல.. அப்பறம் உங்களுக்கு என்ன  அவ்ளோ தில்லு ? ஒரு தில்லும் கிடையாது,  ஒரு வில்லும் கிடையாது என தெரிவித்தார்.