செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி தமிழக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நீட்டைப் பொறுத்தவரை நாடு முழுவதும் நீட்டினால் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஆட்சி செய்திருக்கக் கூடிய அரசு,  வந்த உடனே முதல் கையெழுத்து நாங்கள் நீட்டுக்கு எதிரா போடுவோம் என சொல்லிட்டு,  இன்னைக்கு கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போ முதல் கையெழுத்து என்ன ஆச்சு ? தலையெழுத்தையே  மாற்றுவேன் என்று சொன்னார்கள். என்ன ஆச்சு ? இப்போ  கையெழுத்து இயக்கம் நடத்துறேன்னு சொல்றீங்க. சுப்ரீம் கோர்ட்தின் தீர்ப்பை மறந்து,   ஒரு தலைப்பட்சமாகவே நடந்து கொண்டிருப்பது சரியில்லை.  இன்னொரு பிரச்சனை. கிரிக்கெட் மைதானத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டது சரியானது.  ரொம்ப சரியானது…  இப்ப நானே பார்த்து இருக்கேன்.

வெற்றியின் உணர்வு வரும்போது,  எனக்கு வெற்றியை கொண்டாடுவதற்கு என்ன தோன்றும் ? ஏன் மனசை புண்படுத்துகிறது…  அதே மாதிரி நீங்களும் கோஷம் போட்டு போங்க. உங்களுக்கு நானே பார்த்திருக்கிறேன்..   எங்களோட தோழிகள் ஓஹோ ஜீசஸ் அப்படின்னு சொல்லுவாங்க. ஓஹோ அல்லா அப்படின்னு சொல்லுவாங்க.. சொல்லிட்டு போகட்டும்.  ஜெய் ஸ்ரீ ராம்  அப்படி அவங்க சொன்னதுனால மற்ற மதத்தைச் சார்ந்த சாமிகளை சொல்ல வேண்டும் என்று யாரும் சொல்லலையே என தெரிவித்தார்.