செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எதற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  துன்புறுத்துகிறார்கள் ? என்ன கைப்பற்றினாங்க அவர்கிட்ட ?  சட்டத்துக்கு புறம்பாக அவர்கிட்ட  என்ன இருந்தது ?   எவ்வளவு தங்கம் இருந்தது ? எவ்வளவு ரொக்கம் இருந்தது ? என்ன செஞ்சார் அவர் ? இன்னைக்கு வரைக்கும் அமலாக்கத்துறை அதை வெளியிட்டதா? வெளியிடல… ஏன் செந்தில் பாலாஜி மேல ஏன்  கோவம்ன்னா… கொங்கு மண்டலத்தில அதிமுகவும்,  பாரதிய ஜனதாவும் தான் பலம் என்கின்ற மாயயை உடைத்தெறிந்தார்.

கொங்கு மண்டலத்துல…. சேலத்துல இருந்து கோயம்புத்தூர் வரை உள்ளாட்சித் தேர்தல் எல்லா தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தார். எனவே அவரை குறி வைக்கிறாங்க. குறி வச்சு தான் அவரை கைது செய்தார்கள். என்ன’ அவர் கிட்ட இருந்து கைப்பற்றுனீங்க ?  சொல்லனும் இல்ல. சட்டத்திற்கு புறம்பாக… வருமானத்திற்கு அதிகமாக… என்ன சொத்து வைத்து வைத்திருந்தார்?

இப்போது முன்னாள் அமைச்சர் வீட்டுல ஐந்து நாளா, ஆறு நாளா சோதனை நடத்திட்டு  இருக்காங்க.6 நாளா என்ன சார் இருக்கு அந்த வீட்டுல? 6 நாளா சோதனை போடுவதற்கு என்ன இருக்கிறது ? அங்க உக்காந்து டிபன் சாப்பிட்டுட்டு இருக்காங்களா? டிவி பாத்துட்டு இருக்காங்களா? சினிமா பாக்குறாங்களா? எனக்கு என்னன்னே தெரியல.

எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்களை குறி வைக்கின்றார்கள். அவர்  ஒரு பெரிய தொழிலதிபர். அவரிடம் ஏராளமாக பண புழக்கம் இருக்கும். சட்டத்திற்கு புறம்பாக அவர் என்ன வைத்திருக்கிறார் ? அதுதான்  கேள்வி. ஜெகத்ரட்சகன் ஒரு சிறந்த கல்வியாளர், சட்டத்துக்கு புறம்பாக அவர்கிட்ட எதுவுமே இல்லையே…  நீங்க வேண்டுமென்று செய்கிறீர்கள் என தெரிவித்தார்.