தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்து விட்டது. அந்த ஒப்பந்தத்தின் படியே தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் கச்சதீவு பக்கம் சென்றாலே எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி இலங்கை கடற்படை படுகொலை செய்கிறது. இலங்கை கடற்படை தமிழ்நாட்டை மீனவர்கள் மீன் பிடிக்க உரிய கட்டணம் செலுத்தி லைசன்ஸ் வழங்குவது என பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா-இலங்கை அரசுக்கு இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் அதெல்லாம் ஏமாற்று வேலை தான். தற்போது இலங்கையின் மன்னார் மாவட்டம் மீனவர் பிரதிநிதி ஆலம் என்பவர் இந்த லைசன்ஸ் வழங்கும் முறையை மிக கடுமையாக எதிர்த்துள்ளார். இவர் ஏற்கனவே கட்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க கூடாது எனக் கூறியவர். சீனா ஆதரவு இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா உடன் நெருக்கமாக செயல்பட கூடியவர். இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதித்தால் கடற்பரப்பு மட்டுமல்ல நிலப்பரப்பையும் இந்தியாவிடம் இலங்கை இழந்து விடும்.

இலங்கை நாட்டில் தற்போது மலேரியா தொற்று பாதிப்பு இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதித்தால் மலேரியா தொற்று பாதிப்பு வரும். ஆகையால் தமிழ்நாட்டில் மீனவர்களுடன் பேச்சு வார்த்தையும் இல்லை. தமிழ் நாட்டின் மீனவர்களை அனுமதிக்கவும் கூடாது. கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒரு பேச்சையும் தாங்கள் விரும்பவில்லை என்கிறார் ஆலம். சிங்களர் போடும் கருவாடுக்காக தமிழர்களின் உரிமையே விட்டு தந்தவர்கள் இப்போது ஈழத் தமிழர்களையும் இந்திய தமிழர்களையும் பிரிக்க வேட்டு வைக்கிறார்கள். தமிழன் ஏன் கெட்டான் என தேவநேய பாவாணர் கட்டுரை ஒன்றை எழுதினார். இப்போது தெரிகிறதா? ஆலமும் டக்ளஸ் தேவானந்தாக்களும் இருக்கும் வரை தமிழர்கள் எப்படி உருப்பட முடியும்?