ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத் நகரில் இருந்து 306 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 41 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 7.1 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சேத விவரங்கள் குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.