தேனி மாவட்டம் பூதிபுரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மதுரை கிளை மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பூதிபுரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளது. ஆனால் அந்த பகுதியில் பெண்கள் கழிவறையும், கண்மாய் கரைப்பகுதியும் உள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்நிலையில் 4-வதாக ஒரு கடை தேவை இல்லை.

அதனால் இந்த புதிய டாஸ்மாக் கடை திறப்பதை தடை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது, குடி குடியை கெடுக்கும் என்று அரசு டிவியில் விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது. தற்போது இருக்கும் மது கடைகளை குறைக்க வேண்டிய வழியை பாருங்கள். எங்கு பார்த்தாலும் அதுதான் உள்ளது. இதை அதிகரிப்பதால் என்ன பயன் என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதித்துள்ளது.