தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக நடிகர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பிரபல நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகாவுக்கு டாக்டர் சீட் வாங்கி கொடுத்தது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் தனுஷுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கும் நிலையில் மூத்த சகோதரி பல் மருத்துவராகவும் இரண்டாவது சகோதரி கார்த்திகா மகப்பேறு மருத்துவராகவும் இருக்கிறார்.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக கார்த்திகா தேர்வு எழுதிய நிலையில் கட் ஆப் மார்க்கில் 1 மார்க் குறைந்ததால் வீட்டில் உட்கார்ந்து கதறி அழுத்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென விஜயகாந்த் கஸ்தூரிராஜாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கார்த்திகா அழுவதை பார்த்த விஜயகாந்த் என்ன காரணம் என கஸ்தூரிராஜாவிடம் கேட்க நடந்ததை அவர் கூறியுள்ளார். உடனே விஜயகாந்த் ராமச்சந்திரா மருத்துவமனையின் தலைமை உடையாருக்கு போன் செய்து விஷயத்தை கூற அந்தப் பெண்ணை நேரில் வர சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கார்த்திகாவை நேரில் அழைத்துச் சென்ற பிறகு அவருக்கு மருத்துவ சீட் கொடுத்துள்ளார். மேலும் இந்த தகவலை இயக்குனர் கஸ்தூரிராஜாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.