தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் எஸ்.ஜே சூர்யா, சுனில், இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இன்று காலை நடிகர் விஜய்க்கு மார்க் ஆண்டனி படத்தின் டீசரை காண்பித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.