தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா ஹீரோயின் ஆக நடிக்க அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 19-ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அண்மை காலங்களாகவே திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது நடிகர் விஜயின் சிறு வயது புகைப்படமும் வெளியாகியுள்ளது. மேலும் பள்ளி பருவத்தில் குழந்தையாக இருக்கும் நடிகர் விஜயின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.