தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு ஹாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பல விருதுகளை தற்போது குவித்து வருகிறது. அந்த வகையில் படத்தில் இடம்பெற்ற  நாட்டுக் கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்த நிலையில், ஆஸ்கர் விருதுகளின் இறுதி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் க்ரிடிக்  விருது வழங்கும் விழாவில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர் ராம்சரண், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோருக்கு ஹாலிவுட் க்ரிடிக் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருது ஜூனியர் என்டிஆர் மற்றும் ஆலியா பட் போன்றோருக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் நாட்டுக்கூத்து பாடல் இடம் பெற்றுள்ளது. இயக்குனர் ராஜமவுலி கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் தங்கியுள்ள நிலையில் எப்படியாவது ஆஸ்கார் விருதை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

அங்கு ஆர்ஆர்ஆர் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறார். அங்குள்ள தியேட்டர்களில் பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் போன்ற பலருக்கு ஆர்ஆர்ஆர் படத்தை திரையிட்டு காண்பித்து வருகிறார். இதற்காக ஒரு தனி குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்பதற்காக இயக்குனர் ராஜமௌலி விளம்பரங்களுக்காக மட்டுமே இதுவரை ரூ. 83 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்திற்காக இயக்குனர் ராஜமௌலி 300 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் மூலம் எப்படியாவது ஹாலிவுட்டில் பிரபலமாகி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது 83 கோடி வரை செலவு செய்து ஆர்ஆர்ஆர் படத்தை விளம்பரப் படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.