ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ் அணியின் நிர்வாகி புகழேந்தி, பேரறிஞர் அண்ணாவின் எழுத்துக்கள்… ”அரசியல்வாதிகளுக்கு போர்வாள் பத்திரிக்கை” என்று சொன்னது பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த போர்வாளுக்கு சொந்தக்காரராக… அந்த எழுத்துக்களுக்கு உரிமையாளராக இன்றைய தினம் அண்ணனோடு போர்படை தளபதி ஆக…  எழுத்தாளராக நின்று இங்கே அவர்கள் எழுத ஆரம்பித்து இந்த ”புரட்சி தொண்டன்” வெளியே வந்திருக்கிறது.

இன்றைய தினம் இங்கே இதை கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர்….  நாங்கள் போற்றி வணங்குகின்ற அண்ணன் அவர்கள் இங்கே தலைவரோடு துவக்கி வைத்தார்கள். நான் ஒன்றே ஒன்று சொல்லி முடித்துக் கொள்கிறேன். அவர் அழகாக சொன்னார் இடி, மோடி,  ரைடு எல்லாம் சொன்னார்….  நான் அன்போடு சொல்லுவேன்… நேற்றையே சொன்னேன் இரவு… இப்பொழுதும் சொல்கிறேன்….  நான் இங்கே  நாடாளுமன்ற தேர்தலை எங்கள் அண்ணன் ஒருங்கிணைப்பாளர் நேற்றைய  பிரச்சாரத்திற்கு செல்கிறேன் என்று அறிவித்து விட்டார்கள். அது முதல் வெற்றி.

காஞ்சியிலே பேரறிஞர்  அண்ணா பிறந்த நாளிலே அது. இரண்டாவது வெற்றி இப்பொழுது நான் இங்கு அறிவிக்கிறேன். நான் மருது அழகுராஜை பெரிதும்  பாராட்ட இங்கே வந்திருக்கின்ற டிவியிலே என்னோடு நிகராக அமர்ந்து விவாதம் செய்கின்ற ரவீந்திரன் துரைசாமியும் வரலாறு தெரிந்த துரை கருணா அவர்களையும்  வரவேற்று ஒன்று சொல்கிறேன்.

நாளைய தினம் 24 நாடாளுமன்றம் முடிந்தவுடன் தேர்தல் அறிவிப்புகள் வரும் பொழுது அண்ணா இந்த ”புரட்சி தொண்டன்” எழுதுகின்ற பத்திரிக்கை வலு சேர்ப்பதோடு இல்லை,  உங்களை NDAவும் அழைக்கும்,  ,INDIAவும் அழைக்கும். யார் இந்த நாட்டின் பிரதமர் என்பதை நீங்கள் சொல்லப் போகிறீர்கள் என்ற காலகட்டம் வரும். நேற்று உற்சாகம் வந்துவிட்டது. இன்று  பத்திரிகை கைகளிலே  வந்துவிட்டது.

நாளை நமதே,  நாற்பதும் நமதே. நாம் திரண்டிடுவோம்,  ஒன்று கூடுவோம்,  வெற்றி பெறுவோம் என்று சொல்லி மீண்டும் மீண்டும் இந்த பத்திரிகை இரவு பகலாக உழைத்து எழுதுவதற்கு என் நண்பர் இலக்கிய செல்வர் மருது அழகுராஜ் இருக்கிறார். ஆகவே ஒரு மாபெரும் எழுத்தாளரோடு இந்த பத்திரிக்கை தொடரட்டும்,  வெற்றியை பெறட்டும்.

அதனுடைய நிறுவனர் அண்ணன் என்று சொன்னது தான் தலைவர் வழியிலே… அம்மா வழியிலே நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இதைப் புரட்சி தொண்டன், புரட்சித் தொண்டன் தான். வெற்றியை நிலைநாட்டும் தொண்டன், நாளைய வரலாறை படைக்க இருக்கின்ற தொண்டன்.