நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் முள்ளுகுறிச்சி கல்லாத்து காட்டு வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதைக் கண்ட அமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு வேறு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அரசு மருத்துவர்களிடம் தொலைபேசியில் பேசியவர் அவர், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி கூறினார்.