பத்து வயதில் பாம்பு கடியால் உயரிழந்ததாக கூறப்பட்ட நபர் 15 ஆண்டுக்கு பிறகு உயிருடன் வந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் பாகல்பூர் தொகுதியின் முரசோ கிராமத்தைச் சேர்ந்த ராம்சுமர் யாதவ் என்பவரின் மகன் அங்கேஷ் யாதவ். 10 வயதாக இருக்கும்போது பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிராம வழக்கப்படி சிறுவன் அங்கேசை வாழைத்தண்டில் சுற்றி கிராம மக்கள் ஆற்றல் வீசினர்.
ஆனால் இறந்துவிட்டதாக கருதப்பட்ட அங்கேஷ் 15 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பியதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாம்பு கடித்த பிறகு என்ன ஆனது என தனக்கு தெரியவில்லை எனவும் சுயநினைவு வந்து கண்களை திறந்த போது பாட்னா அருகே பாம்பு பிடிப்பவருடன் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தனது ஊரை பற்றியும் தனக்கு நினைவில் இருந்த நபர்களின் பெயர்களை கூறி குடும்பத்தினரை கண்டுபிடித்தேன் என்றும் அங்கேஷ் தெரிவித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கு வந்துள்ளது அங்கேஷ் தானா என்பதை போலீசாரும் உறுதி செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.