இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்கள் உபயோகிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உரையாட வாட்ஸ் அப் செயலியை ஏராளமானோர் உபயோகிக்கின்றனர். வாட்ஸ் அப் செயலியிலும் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது மற்றும் ஒரு அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பிய பிறகு அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது அதில் கூடுதல் தகவலை சேர்க்க விரும்பினாலோ அனுப்பப்பட்ட மெசேஜை மீண்டும் எடிட் செய்து கொள்ளும் வசதியை whatsapp தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு நீங்கள் அனுப்பிய மெசேஜை அழுத்தி பிடித்தால் எடிட் எனும் Option காட்டும் அதன் மூலமாக நீங்கள் அனுப்பிய மெசேஜை திருத்திக் கொள்ளலாம். ஆனால்  15 நிமிடத்திற்குள் அனுப்பப்பட்ட மெசேஜாக இருந்தால் மட்டுமே திருத்திக் கொள்ள முடியும். Whatsapp பயனர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் இந்த அப்டேட் வரும் வாரத்தில் அனைவராலும் பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.