அமேசானில் நாம் பலவித பொருட்களை வாங்கி வருகிறோம். சில நேரம் நமக்கு பிடித்தமான பொருட்களை பார்த்து அவற்றை பிறகு வாங்க கார்ட்டில் போட்டு வைக்கிறோம். அவ்வாறு சில பொருட்களை கார்ட்டில் வைத்து இருந்தால், அதை உடனடியாக வாங்கி விடுவது நல்லது. ஏனென்றால் மே 31-ஆம் தேதிக்கு பின் இத்ளத்திலிருந்து பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன்பை விட அதிக விலை கொடுக்கவேண்டி இருக்கும்.

ஆன்லைன் விற்பனை தளமான அமேசான், அதன் விற்பனையாளர் கட்டணம் மற்றும் கமிஷன் கட்டணங்களை மாற்ற இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. அதன்பிறகு பொருட்களின் விலைகள் முன்பு இருந்ததை விட அதிகமாகும். அமேசான் கமிஷன் வாயிலாக தான் பணம் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விற்பனையாளர்கள் இத்தளத்தின் வாயிலாக பொருட்களை விற்கின்றனர். அதற்கு பதில் நிறுவனம் பணத்தை வசூல் செய்கிறது.