உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp  செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பயனர்களின் வசதிக்காக விரைவில் 5 புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மெட்டாவுக்கு சொந்தமான செயலியானது லாக் செய்யப்பட்ட சாட்களுக்காக ரகசிய குறியீடு அம்சத்தில் செயல்படுகின்றது. இந்த அம்சம் தொலைபேசியில் முக்கிய பாஸ்வேர்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. பயனரின் உரையாடல்களின் பிரைவசியை யாராவது உங்களது செல்போனை access செய்தால் கூட மேம்படுத்தும். லாக் செய்யப்பட்ட உரையாடல்கள் எப்போதுமே தனி பிரிவில் பட்டியலிடப்படும் எனவும் இதனை உங்களது செல்போனில் PIN அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் மட்டுமே அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update tab- க்கான search அம்சம்:

வாட்ஸ் அப்பில் சர்ச் என்னும் பட்டன் கிடைக்கும். இதன் மூலமாக ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ், followed channel’s, verified channel ஆகியவற்றை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம்.

வாட்ஸ் அப்பில் உங்களது பயனர்கள் தங்கள் அரட்டை உரையாடல்களின் மேல் ஒரு செய்தியை பின் செய்வதன் மூலமாக அதனை ஹைலைட் செய்ய முடியும். இதனால் மற்றவர்கள், முக்கியமான அல்லது அடிக்கடி குறிப்பிடப்படும் செய்திகளை அணுகுவதை எளிதாக இருக்கும்.

மறுபடியும் அமைப்பு செய்யப்பட்ட சாட் இணைப்பு மெனு:

பயனர்கள் புதிய மாடல் ஸ்டைலில் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சாட் attachment menu வை எளிதில் பெற முடியும்.

IP முகவரியை பாதுகாக்க பிரைவேசி அம்சம்:

இந்த அம்சத்தின் மூலமாக பயணங்கள் குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யும்போது கூடுதல் பாதுகாப்பு அடுப்புடன் பரிசோதனை செய்ய முடியும்.