உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட சேட்கள் மற்றும் குரூப்புகளில் வரும் மெசேஜ்களை பின் செய்து வைக்கும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வசதி மூலமாக சாட், படங்கள், எமோஜிகள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை 24 மணி நேரம், ஏழு நாட்கள் மற்றும் 30 நாட்கள் வரை பின் செய்து வைக்கலாம். ஏற்கனவே மெசேஜ்களை ஸ்டார் செய்து வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ள நிலையில் இந்த புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.