இந்தியாவில் தற்போது ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் மற்றும் வி ஐ ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாளர்கள் பயனடையும் விதமாக வருடாந்திர வேலிடிட்டி கொண்ட பல பிளான்களை வழங்கி வருகிறது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் 299 ரூபாய் திட்டத்தில் 395 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது. இதன் மூலம் தினசரி மூன்று ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால்கள் , நூறு இலவச எஸ் எம் எஸ் களை பெறலாம். குறிப்பாக 2024 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் 2999 ரூபாய் திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகளை வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஆகியவையும் கூடுதல் நன்மைகள் ஆகும்.

Vi நிறுவனம் 2999 ரூபாய் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடியுடன் தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் மொத்தம் 850 ஜிபி டேட்டா வழங்குகின்றது. இதில் அன்லிமிடட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

அடுத்ததாக ஏர்டெல் நிறுவனம் 2999 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் கால்களுக்கான சலுகைகளையும் வழங்குகின்றது. அதே சமயம் வரம்பற்ற 5g டேட்டாவும் வாடிக்கையாளர்களுக்கு இதில் வழங்கப்படுகின்றது.