நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை சீமான் சரமாரியாக விமர்சித்தார். அதாவது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த புதிதில் ஆதரவு கொடுத்த சீமான் அவர் முதல் மாநாட்டை நடத்தி முடித்த பிறகு கொள்கைகளை அறிவித்தார். முன்னதாகவே விஜயின் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய சீமான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தின் போது கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசினார்‌. குறிப்பாக விஜயின் கொள்கைகள் கொள்கையே கிடையாது. அது ஒரு அழுகிய கூமுட்டை என்றும், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களையும் சரமாரியாக விமர்சித்தார்.

அதன் பிறகு பேசிய சீமான் தமிழ் தேசியமும் திராவிடமும் தங்களுடைய இரு கண்கள் என்று விஜய் கூறிய நிலையில் இந்த இரண்டும் ஒன்றா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்பிறகு நான் ஒரு குட்டி கதை சொல்பவன் கிடையாது ப்ரோ. What’s Bro it’s very wrong bro. நடுநிலையா.? தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? இந்தப் பக்கம் நில் அல்லது அந்தப் பக்கம்‌நில். இரண்டுக்கும் நடுவே நின்றால் லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய். இது நடுநிலை அல்ல மிகக் கொடு நிலை என்றார். இது ஒன்னும் சினிமா பஞ்ச் டயலாக் அல்ல. நெஞ்சு டயலாக். ப்ரோ இது வெறும் டிரைலர் தான். மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு மெயின் பிக்சர் வரும். இது வேலு நாச்சியார் கட்அவுட் வைத்தது சரி. முதலில் வேலு நாச்சியார் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா என்றார். மேலும் இனி அண்ணன் தம்பி உறவு எல்லாம் கிடையாது. கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரி தான். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் என்னுடைய ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது என்று கூறினார்.