இதுவரை அமைதியாக இருந்த எஸ்.ஏ.சி, இப்போது காங்கிரஸ் பாரம்பரியத்தைப் பேசி விஜய்க்கு ஆதரவு திரட்டுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், “காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி, ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து தனது செல்வாக்கை இழந்துவிட்டது” என எஸ்.ஏ.சி கூறியிருப்பது, தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் ஆழ்மனதில் இருக்கும் ஆதங்கத்தைத் தொட்டுப் பார்க்கும் முயற்சியாகவே தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஒரு புதிய கட்சி. அதற்கு ஒரு தேசியக் கட்சியின் ஆதரவோ அல்லது நீண்ட கால அரசியல் பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சியின் துணையோ இருந்தால், அது தேர்தலில் பெரிய பலத்தைத் தரும் என விஜய் தரப்பு கணக்கு போடுகிறது.
“விஜய்யுடன் இணைந்தால் காங்கிரஸால் பழைய வரலாற்றைத் தக்க வைக்க முடியும்” என எஸ்.ஏ.சி கூறுவது, விஜய்யின் இளையோர் வாக்கு வங்கியும் காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியும் இணைந்தால் அது திமுக-அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கும் சவாலாக அமையும் என்ற கணிப்புதான்.
