செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு ஆட்சி தன் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதை வைத்துக் கொண்டு தவறாக தொடர்ந்து செயல்பட முடியாது. அது தவறு. அதை  நம்முடைய கட்சியினுடைய அகில இந்திய தலைவர் திரு நட்டாஜி அவர்கள் மிக உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இது நிச்சயமாக சரியான நடவடிக்கை எடுப்பாங்க என்ற  நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.

கௌதமி அவர்கள் தொடர்ந்து என்னோடு தொடர்பில் தான் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு வருவார்கள்.. தொலைபேசியில் பேசுவார்கள். தொடர்ந்து பேசிக்கிட்டு தான் இருக்கோம்.  கௌதமி  அவர்களுடைய சொத்துக்களை 25 ஆண்டுகளாக அவரோடு பணியாற்றிய ஒரு நபர்…  அந்த சொத்துக்களை அபகரிச்சிட்டாங்கன்னு ஒரு பத்திரிக்கை செய்தி கொடுத்த உடனே,  அன்னைக்கே நான் தொடர்பு கொண்டேன்.

அப்புறம் பாரதி ஜனதா கட்சியிலிருந்து ஒரு டீம் போட்டு,  அணைக்கு சென்னையில் இருந்த உயர் அதிகாரிகள் கிட்ட பேசி அப்பாயின்மென்ட் வாங்கி கொடுத்து…  கௌதமி அவர்கள் அந்த உயர் அதிகாரியை சந்தித்து, கம்ப்ளைன்ட்டும்  கொடுத்திருக்காங்க. ஆனால்  இந்த கேஸ்ல நானும் எதிர்பார்த்த அளவுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  ஒரு பக்கம் அவங்க கேட்டாங்கன்னா… நாங்க என்ன பண்றது நீதித்துறையில் முன்ஜாமீன் வாங்கிட்டாங்க, தலைமறைவா இருக்காங்கன்னு ஒரு பக்கம் சொல்லுறாங்க.