தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13ஆம் தேதி அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு செவி சாய்த்து அரசு நவம்பர் 13ஆம் தேதி விடுமுறையாக அறிவித்து அன்றைய நாள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவித்துள்ளது.