திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ‘பாரத் இந்து முன்னணி’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கேட்கும் வழித்தடம் மிகவும் போக்குவரத்து நெரிசலான பகுதி.

சென்னையினுடைய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இதுவும் ஒன்றாகும். அதனால் அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அதோடு நீதிபதி திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?. தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.