இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் ஒன்றாகும். இது தமிழர்களின் சிறந்த பாரம்பரிய சின்னமாகும். தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் முறைகளை உலகிற்கே பறைசாற்றும் சிறந்த கோவிலாகும். இதில் தற்பொழுது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அகற்றப்பட்டு இந்தி மொழியில் கல்வெட்டுகள் வைக்கப்படுகிறது.

இந்த செயல்களில் ஈடுபடுபவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் சரி பார்ப்பகம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்த வீடியோ பொய்யான தகவலை பரப்புகிறது. இந்த வீடியோ கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அப்பொழுதே தொல்லியல் துறை அதிகாரி இதற்கு விளக்கம் அளித்து விட்டார். தஞ்சாவூரில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மராட்டியர் ஆட்சி காலத்தில் தேவ நாகரி வரி வடிவ கல்வெட்டுகள். இதனை தவறாக இந்தி மொழி என திரித்து கூறி வருகின்றனர். இது மாதிரியான தவறான கருத்துக்களை யாரும் பரப்ப வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.