தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி மற்றும் பாகுபலி போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக நடிகை அனுஷ்கா உடல் எடையை அதிகரித்தார். ஆனால் அதன் பிறகு அவரால் உடல் எடையை குறைக்க முடியாததால் பாகுபலி படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

தற்போது 2 வருடங்களுக்கு பிறகு நடிகை அனுஷ்கா மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக நவீன் நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ராதன் வரிகளில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும் இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.