தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சர்வானந்த். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் சர்வானந்துக்கு கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்து பல மாதங்களாகியும் திருமண தேதி உறுதி செய்யப்படாததால் அவர்களுடைய திருமணம் கேன்சல் ஆகிவிட்டதாக இணையதளத்தில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நடிகர் சர்வானந்துக்கு நெருக்கமான ஒருவர் கூறும் போது அவர் தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றதால் தான் திருமண தேதி உறுதி செய்யப்படாமல் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நடிகர் சரவானந்த் விரைவில் லண்டனிலிருந்து திரும்புவதால் அவருடைய திருமண தேதி குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.